புமா மற்றும் இன்டர் நேஷனல் ஸ்ட்ரைக்கர்ஸ் அகாடமியுடன் இணைந்து கால்பந்தில் சிறந்த கோல் அடிக்கும் (ஸ்ட்ரைக்கர்ஸ்) திறமையான இந்திய வீரர்களை உருவாக்கும் வகையில் பயிற்சி அளிக்க, புட்பால் பிளஸ் அகாடமி திட்டமிட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த 2 வீரர்களுக்கு 100 சதவீத உதவித் தொகையுடன் ஸ்பெயினில் ஒரு மாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
புட்பால் பிளஸ் என்பது சென்னையில் செயல்படும் கால்பந்து பயிற்சி அகாடமி ஆகும்.
இன்டர்நேஷனல் ஸ்ட்ரைக்கர்ஸ் அகாடமி இந்திய கால்பந்தில் ஸ்ட்ரை க்கர்களின் பற்றாக்குறையை போக்கும்விதமாக சிறந்த வீரர் களை உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. பயிற்சியில் 13 வய துக்கு மேற்பட்டவர்கள் பங் கேற்கலாம்.
புட்பால் பிளஸ் நிறுவனரும் பயிற்சியாளரு மான டேவிட் ஆனந்த் கூறியதாவது: இன்டர் நேஷனல் ஸ்ட்ரைக்கர்ஸ் அகாடமியின் முதல் கட்ட பயிற்சி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 21 வரை நடைபெற உள்ளது.
பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்கள் பெயரை ஜூலை முதல் வாரத்தில் www.footballplus.in என்ற இணை யதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படும்.
ஸ்பெயின் நாட்டின் அத்லெடிக் பில்பாவோ கிளப்பைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து வீரர் கைஸ்கா டோக்வெரோ வால் வீரர்களுக்கு இரண் டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்பு உள் ளது என்றார். பயிற்சி திட்டம் குறித்து கைஸ்கா டோக்வெரோ கூறுகையில், வீரர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தி, ஸ்பெயின் கால்பந்து நுட் பத்தை அவர்களுக்கு அறி முகம் செய்ய இருக்கிறேன் என்றார்.
இந்தியாவின் சிறந்த விளையாட்டு பிராண்டுகளில் ஒன்றான புமா இந்த திட்டத்திற்காக வணிகப் பங்குதாரராக இணைந்துள்ளது. தேர்வு செய்யப்படும் 2 சிறந்த வீரர்கள் ஸ்பெயின் நாட்டில் ஒரு மாதம் பயிற்சி பெறுவதற்காக 100 சதவீத உதவித் தொகையும் வழங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு ஸ்பெயினில் உள்ள 2-வது பிரிவு லா லிகா கிளப்பில் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும்.



