அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத் தில், ‘ஆய்வு தொழில்நுட்பத்தில் கல்வியியலின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடந்தது.
பொறியியல் மற்றும் கல்வியியல் புலமுதன்மையர் பேராசிரியர் முனைவர் சற்குணம் வரவேற்றார். அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறு வனத்தின் துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் தலைமை தாங்கி பேசும்போது, தொலைதூர கிரா மங்களில் பல்வேறு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமூகத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையை மாற்ற கற்றல்-கற்பித்தல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
சான்டியாகோ பல்கலை
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் சான்டியாகோ பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் கணி பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் மகாஸ் வேதா சர்கார் பேசும்போது, பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் மீது செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நவீன கருவி பொருத்தப்படுவதால் பாலின் தன்மைகளை உடனுக் குடன் அளித்திடக்கூடிய கருவி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. 6ஜி தொழில் நுட்பம் உருவாவதற்கு உரிய பணி களை செய்து வருவது குறித்து குறிப்பிட்டார்.
நவீன தொழில்நுட்பங்களின் வழி செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் வீட்டில் உள்ளவர்களின் செயல்பாடுகளை நாம் வெளியில் இருந்தபடியே கண்காணிக்க முடியும். வனங்களில் எதிர்பாராதவிதமாக உருவாகும் காட்டுத் தீ, வனவிலங் குகளால் ஏற்படும் அபாயம் போன்ற வற்றை கண்காணிக்க முடியும் என்று விளக்கக்காட்சி மூலம் எடுத்துக்கூறினார்.
மனித மூளையின் செயல்பாடுகளை பயன்படுத்தி இயந்திர அறுவைசிகிச்சை செய் வற்கு ஆய்வு நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு நவீன செயற்கை நுண்ணறிவு கருவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் உயர்நிலைப்பள்ளி மற்றும் இளங்கலை ஆய்வு, பட்டதாரி ஆராய்ச்சி மாணவர்கள் போன்றோர் நரம்பியல் பொறியியல் பட்டப்படிப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு நரம்பியல் நிபுணர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பதிவாளர் பேராசிரியர் முனை வர் எஸ்.கௌசல்யா வாழ்த்துரை வழங்கினார்.
பன்னாட்டு ஆராய்ச்சி கல்வியியல் மையத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜி.ஜீவரத்தினம் நன்றி கூறினார்.



