சுயநிதி கலை அறிவியல் சட்ட கல் லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவ, மாண விகளுக்கு கல்விக் கட்டணம் (Tuition Fees) செலுத்துவதில் இருந்து விலக்களித்து அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளது.
கல்விக் கட்டணச் சலுகை பெறும் ஆதிதிராவிடர், பழங் குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இம்மாணவர்கள் முதலாம் ஆண்டு கல்லூரி சேர்க்கையின் போது கல்வி உதவித் தொகை பெறுவதற்கான சாதி வருமானம், ஆதார் அட்டை நகல், மாணவரின் பெயரில் துவக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களுடன், அந்தந்த கல்லூரிகளில் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகை பெறுவதற்கான உதவி மையத்தினை (HELP DESK) அணுக வேண்டும்.
அவர்களது உதவியுடன் சான்றுகளை நேரிடையாக இணையதளத்தில் பதிவேற் றம் செய்து, கல்வி உதவித் தொகை பெற்று பயனடையலாம்.
கல்லூரி நிர்வாகத்தினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களின் கல்லூரி சேர்க்கையின் போது, கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய கட்டாய மற்றும் திருப் பியளிக்கப்படாத கட்டணங்களை மாணவர்களிடம் வசூல் செய்யக்கூடாது.
அரசிடம் இருந்து மாணவர்களின் கல்விக் கட்டணம் வழங்கப்படும் வரை அம் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்த வற்புறுத்தக்கூடாது.
அரசாணைக்கு எதிராக தகுதியுடைய மாணவர்களிடம் கட்டாயக் கல்விக் கட்டணம் வசூல் செய்யும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது பாதிக்கப்பட்ட மாணவர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நல அலுவலர்ஆகியோரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொலைபேசி வாயிலாகவோ (0422-2303778) புகார்களை தெரிவிக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் புகார் குறித்து சம்பந் தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கடு¬ மயான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆகவே, கல்லூரி நிர்வாகத்தினர் அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையினை மாணவர்களுக்கு தங்கு தடையின்றி சென்றடைய புகார்களுக்கு இடமளிக்காவண்ணம் இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



