Homeதலையங்கம்அற்புதம்மாளை பாராட்ட வேண்டும்!

அற்புதம்மாளை பாராட்ட வேண்டும்!

எவ்வளவு இடர்கள் வந்தாலும் எல்லாம் கடந்து போகும் என்ற நம்பிக்கையை பொதுவெளியில் விதைத்ததற்காக அற்புதம்மாள் என்ற தாயை கனிவோடு பாராட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில் காங்கிரசை தவிர அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் எழுவர் விடுதலைக்காக குரல் கொடுத்திருக்கின்றன. சட்டமன்றத்தில் விடுதலைக்காக தீர்மானமே இயற்றப்பட்டிருக்கிறது.

தற்போது திமுகவும் சட்ட ரீதியாக சில முயற்சிகளை எடுத்ததன் விளைவாகவே இந்த விடுதலை சாத்தியமாகி இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுதலையை வரவேற்றிருக்கிறார். நேரடியாக பேரறிவாளனை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதைப்போல சிறையில் மிக நீண்ட காலம் இருக்கும் கைதிகள் விஷயத்தில் அரசோ, நீதிமன்றமோ முடிவெடுக்க இந்த வழக்கின் தீர்ப்பு உதவியாக இருக்கும்.

பேரறிவாளன் வழக்கில் 31 ஆண்டுகளுக்கு பிறகு நீதி கிடைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு விடுவித்துள்ளது பாராட்டத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img