fbpx
Homeபிற செய்திகள்அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய ‘வாக்கரூ’

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய ‘வாக்கரூ’

காலணிகள் தயாரிப்பில் முன்னணி பிராண்டான ‘வாக்கரூ’, இந்த ஆண்டு குழந்தைகள் தின நிகழ்வை, செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள அரசு மேனிலைப் பள்ளி மாணவர்களோடு இணைந்து கொண்டாடியது.

வாக்கரூ ஃபவுண்டேஷனின் முன்னெடுப்பாக நடைபெற்ற இக்கொண்டாட்ட நிகழ்வில், வாக்கரூ நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் குழு, இப்பள்ளியின் மாணவர்களோடு சேர்ந்து, ‘போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதன் மோசமான விளைவு’ என்ற தலைப்பில் நாடகத்தை நடத்தியது.

மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட இந்நாடகம் குழந்தைகள் தின கொண்டாட்டத்தில் இடம்பெற்ற பல நிகழ்ச்சிகளுள் மிக அதிக வரவேற்பைப் பெற்றது.

இந்த விழிப்புணர்வு செயல்திட்டத்தில் வாக்கரூ நிறுவனத்தின் பணியாளர்களும், இப்பள்ளி மாணவர் களோடு இணைந்து நாடகத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வாக்கரூ’ நிறுவனத்தின் கார்ப்பரேட் மனிதவளத் துறையின் தலைவர் ஜவஹர் கார்த்திகேயன் பேசும்போது, ஆங்கிலத்தில் மிக முக்கியமான 5 P என அறியப்படும் Purpose (நோக்கம்), Passion (பேரார்வம்), Preparation (தயாராகுதல்), Patience (பொறுமை) மற்றும்Persistence (விடாமுயற்சி) என்ற அம்சங்களை குறிப்பிட்டார்.
இசைக்கு ஏற்ப குழந்தைகள் நடனமாடி மகிழ்ந்தனர்.

‘வாக்கரூ’ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்

‘வாக்கரூ’ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர் வி.நௌஷத் பேசுகையில், அற்புதமான இப்பள்ளி குழந்தைகளோடு இப்பொழுதை செலவிட்டது, இந்நாளை அழகான நாளாக மாற்றியது.

இக்குழந்தைகளை மகிழ்ச்சியடையுமாறு செய்வதற்கான முயற்சிக்கு பங்களிப்பை வழங்க கிடைத்த வாய்ப்பு ஒட்டுமொத்த வாக்கரூ குடும்பத்திற்கும் உண்மையிலேயே மகிழ்ச்சியையும், மனநிறைவும் தந்திருக்கிறது.

இக்கொண்டாட்ட நிகழ்வில் இந்த சின்னஞ்சிறு குழந்தைகள் வெளிப்படுத்திய திறமையும், ஆர்வமும் பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
எங்களைப் பொறுத்தவரை அதிக மனநிறைவு அளித்த அனுபவங்களுள் இதுவும் ஒன்று என்று என்னால் உறுதியாக கூற முடியும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img