கோவையில் கடந்த ஓராண்டில் 40க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் அடியெடுத்து வைத்துள்ளதால் கோவை டைடல் பார்க் நிரம்பி வழிகிறது. பாராட்டத்தக்கது.
தமிழக அளவில் உயர் கல்விக்கான முக்கிய மான மையமாக கோவை உருவெடுத்ததால் மனித வளத்தில் உயர்ந்து நிற்கிறது. இதன் பலனாக 15 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஐ.டி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் கால் பதித்தன.
2000-2011 திமுக ஆட்சியின் போது இதற்காகவே கோவையில் டைடல் பார்க் அமைக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் சார்பில் கோவையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டன.
இதன் மூலம் கோவையிலும் அதன் சுற்றுபுறங்களிலும் ஏராளமான ஐ.டி நிறுவனங்கள் குவிகின்றன. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
ஐ.டி. தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் சில,
கோவையில் கால்பதிக்கத் தயாராகி வருகின்றன. அதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.
அடுத்தகட்ட வளர்ச்சியை கோவை மாநகரம் எட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை!