ஏசியன் பெயிண்ட்ஸ் – ஹோம் டெக்கார் (இல்ல அலங்காரம்) பிரிவில் அதிரடியாக இந்த ஆண்டு களமிறங்கியிருக்கிறது.
ஹோம் டெக்கார் பிரிவில் அடோர், பியூர் – ராயல் மற்றும் தி பியூர் கான்செப்ட் ஃபார் நிலையா என்ற பிராண்டுகளில் ஃபர்னிஷிங் ஃபேப்ரிக்குகளில் 63 புதிய புத்தகங்கள் இப்போது கிடைக்கப் பெறுகின்றன.
ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட்- ன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் அமீத் சிங்கில் கூறியதாவது:
இல்ல அலங்காரப் பிரிவில் தங்களது செயல்திறனை ஒரு புத்தம் புதிய பிரிவிற்கு எடுத்துச்செல்லும் விதமாக கையால் நெய்யப்படும் தரைவிரிப்பு, கம்பளங்கள் மற்றும் தட்டையான நெசவு விரிப்புகள் என்பவற்றின் ஒரு விரிவான அணிவரிசையை உருவாக்க ஜெய்ப்பூர் ரக்ஸ் நிறுவனத்துடன் ஏசியன் பெயிண்ட்ஸ் நிலையா ஒத்துழைப்பை மேற்கொண்டிருக்கிறது.
ஏசியன் பெயிண்ட்ஸ் – ன் சொந்த வடிவமைப்பு பிரிவு மற்றும் ஜெய்ப்பூர் ரக்ஸால் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த கலெக்ஷன், பாரம்பரியத்திலிருந்து தற்கால நவீனத்துவம் வரை, நுட்பமானதிலிருந்து, மிகச்சிறியது வரை பல்வேறு வகையிலான வடிவமைப்புகளை வழங்குகிறது.
தரைவிரிப்பு / கம்பளங்களை உருவாக்கும் கைவினைக் கலைஞர்களோடு நேரடியாக பணியாற்றுகின்ற ஒரு புதிய பிசினஸ் மாடலை உருவாக்கியதன் வழியாக கம்பள / தரைவிரிப்பு தொழில்துறையையே ஜெய்ப்பூர் ரக்ஸ் உருமாற்றம் செய்திருக்கிறது.
2022-ம் ஆண்டில் மட்டும் 17 புதிய கலெக்ஷன்கள் இதன் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பிரத்யேக வடிவமைப்புகள் மற்றும் பெரிய வண்ண, பிரிண்ட், மெட்டீரியல் விருப்பத்தேர்வுகளை உள்ளடக்கிய 1000-க்கும் அதிகமான வால் கவரிங்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆசியாவில் கைப்பட தயாரிக்கப்படும் எய்ஜ்ஃபிங்கர் நேச்சுரல் வால் கவரிங்குகள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
மேக்ஸிமில்லியானோ மாடெஸ்டிஸ் லெஸ் அடெல்லியர்ஸ் 2M மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஜெய்ப்பூர் அடெல்லியர் ஆகிய இரண்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இந்த ஆண்டின் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
INK என்ற பிராண்டும், வாண்டெரிங் லைன்ஸ் என்ற அதன் அறிமுக கலெக்ஷனும் இந்த ஆண்டு சிறப்பான அறிமுகத்தைப் பெற்றன.
புதிய அறிமுகங்கள் அனைத்தும் விரைவில் எமது பியூட்டிஃபுல் ஹோம்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் பிராண்டின் அங்கீகாரம் பெற்ற ரீடெய்லர்கள் வழியாக விரைவில் நுகர்வோர்களுக்கு கிடைக்கும் என்றார்.



