கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணாகலை அறிவியல் கல்லூரியில், ‘பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா’ கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை இயக்க அலுவலர் ஸ்வாதி ரோஹித் தலைமை வகித்தார்.ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்கு மார் வரவேற்றார்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடி யர் எஸ்.கே. யாதவ் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு பேசியதாவது:
“இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 140 கோடி. இதில் 53 சதவீதம் பேர் இளைஞர்கள். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளு டன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம். அதனால் தான் நம்நாடு, ‘இளம் இந்தியா’வாகத்திகழ்கிறது.
இதுநாம் பெருமைப்படுவதற்கு மட்டுமல்ல, நாட்டின் முன்னேற்றத்தில் இளை ஞர்களுக்கு உள்ள பொறுப்பையும் உணர்த்துகிறது. உலகில் இதுதான் முக்கியமானது என்பது இல்லவே இல்லை.
அனைத்துமே முக்கியமானது தான். அனைத்து பணிகளுமே சமமான முக்கியத்துவம் பெற்றது தான். நமது நாட்டின் முப்படை 1.4 மில்லியன் எண்ணிக்கையைக் கொண்டது.
சீனாவைவிட படை பலம் மிக்க பாதுகாப்பு படை, நம்முடைய இந்திய முப்படை தான். இது நம்முடைய நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கு கிறது. 16.5 வயது முதல் 27 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் ராணுவத்தில் சேர தகுதியானவர்கள்.
தேர்வு செய் யப்படுபவர்களுக்கு நல்ல ஊதியம், சலுகைகள், சமூக நன்மதிப்பு போன்றவை கிடைக்கும். ஓய்வுக்குப்பிறகு நிறைய சலுகைகளைப் பெறமுடியும். வேலைவாய்ப்புகளைப் பெறவிரும்புபவர்கள் ராணுவத்திலும் பணியாற்ற ஆர்வம் காட்டலாம்.
மாணவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்றல்முடிவற்றது மற்ற வர்களுடன் தங்களை ஒப்பிடாமல் இருப்பது நல்லது.உங்கள் முன்னேற்றத்தில் எப்போதுமே ஆசிரியர்கள் முக்கியப்பங்கு வகிப்பார்கள்.
ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருப்பார் என்றால், இவ்விருவரின் வெற்றிக்குப்பின்னால் ஆசிரியர்கள் இருப்பார்கள். அனைவரையும் இணைக்கும் பாலமாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். இந்நேரத்தில் அவர் களை நினைவுகூர்ந்து நன்றி செலுத்துவோம்”. இவ்வாறுஅவர்கூறினார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி
அதைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர் ஜெ.பாமினி, கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் எம்.பிரணீஷ், பன்னாட்டு வணிகத்துறைத்தலைவர் முனைவர் ஐ.பர்வீன்பானு ஆகியோருக்கு முறையே ‘சிறந்த ஆசிரியர் விருது’கள் மற்றும் தலா ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் என ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
பன்னாட்டு வணிகத்துறை, மேலாண்மைத்துறை மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கு சிறந்த துறைகளுக்கான விருதுகள் மற்றும் ரூ.25 ஆயிரம், ரூ.20ஆயிரம், ரூ.15ஆயிரம் என ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ராணுவவீரர்களின் பேண்ட்வாத்திய இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரிகேடியர் எஸ்.கே.யாதவின் மனைவி சரிதாயாதவ், ராணுவ அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளைக் கல்லூரியின் அகமதிப்பீட்டுக்குழு பொறுப்பாளர்கள் (IQAC) கணிதத்துறைத் தலைவர் முனைவர் என்.உமா, பன்னாட்டு வணிகத் துறைத்தலைவர் முனைவர் ஐ.பர்வீன்பானு, பி.எஸ்சி. சி.எஸ்., சி.எஸ். துறைத்தலைவர் முனைவர் வி.கிருஷ்ணபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.



