fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் சுதந்திர தின கோலாகலம்

ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் சுதந்திர தின கோலாகலம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,சுதந்திர தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர்முனைவர் பி.எல். சிவக்குமார் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோயம்புத்தூர் தேசிய மாணவர் படை தலைமையிடப்பயிற்சி அலுவலர் லெப்டினன்ட் கர்னல் தினேஷ்குமார் பத்தக், கொடியேற்றி வைத்தார்.

சிறப்பு நிகழ்வாக, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பைத் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டமாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.

அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக பாப்பநாயக்கன் பாளையம் மணி மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள காந்திமண்டபத்தில் இருந்து, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் தலைமையில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள், தேசியக் கொடியை ஏந்தியவாறு, கல்லூரி வளாகம் வரை ஊர்வலமாக வந்தனர்.

அப்போதுபொதுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சுதந்திர தினவிழாவில் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img