சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியிடங்களில் விதவைகள், கணவரால் கைவிடப் பட்டவர் களுக்கு முன்னுரிமையில் 25 சதவீதம் வேலை கொடுத்தே ஆக வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு கோவை, அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.
இப்பேரவையின் நிறுவனத் தலைவர் வி.புஷ்பானந்தம் நன்றி தெரிவித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் குறிப்பாக சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர் போன்றவர்களுக்கு இந்த உத்தரவின் மூலம் அதிக பயன் கிடைக்கும்.
இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



