நீலகிரி மாவட்டம், உதகை வி காலனி பகுதியில் கனமழையினால் வீடுகள் சேதமடைந்து நிவாரண முகாம்களில் தங்கியவர்களை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.
உடன் மாவட்ட கலெக்டர் (பொ) / மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.



