fbpx
Homeபிற செய்திகள்வீடுகளில் கற்றல் சூழ்நிலைகளை பெற்றோர் ஏற்படுத்தித் தர அறிவுறுத்தல்

வீடுகளில் கற்றல் சூழ்நிலைகளை பெற்றோர் ஏற்படுத்தித் தர அறிவுறுத்தல்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு, ‘உரம்’ என்ற தலைப்பில் மாணவர்களின் படிப்பில் பெற்றோர்களின் பங்கு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் எம்.அகிலா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் மரபின் மைந்தன் மு.முத்தையா பேசும்போது, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்காக சிறப்பான கற்றல் சூழ்நிலையை, வீடுகளில் ஏற்படுத்தித் தர வேண்டும்.

குழந்தைகளின் மனதில் வாசிப்புப் பழக்கத்தை தூண்டுவதற்கும், புகுத்துவதற்கும் நல்லதொரு நூலகத்தை உருவாக்கித் தர வேண்டும்.

குழந்தைகளுக்கு பெற்றோர்களே ஹீரோ. ஆகவே அவர்கள் வாழ்நாள் முழுவதும் முன்மாதிரியாக (ரோல் மாடல்) செயல்பட வேண்டும். மாணவர்கள் தங்களது திறமைகளை இளம் வயதிலேயே கண்டறிந்து, அந்தத் துறையில் கற்றுத்தேறினால் எளிதில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடையலாம்.

இதற்கு பெற்றோர்களின் ஊக்குவிப்பும் உறுதுணையும் முக்கியம் என்றார். கல்லூரியின் கேரியர் டெவலப்மெண்ட் மைய இயக்குநர் முனைவர் எம்.தாமரைக்கண்ணன் பேசும்போது, வாழ்க்கையில் வெற்றியை அடைய, குழந்தைகளுக்கு பெரிய இலக்குகளை பெற்றோர் நிர்ணயிக்க உதவ வேண்டும்.

பறவை இனத்தில் கழுகு மட்டும் வானத்தில் மிக உயர பறக்கும். புயல் போன்ற சீற்றத்தால் மற்ற பறவைகள் பாதிக்கப்படும்போது, கழுகு மட்டும் அதில் பாதிக்கப்படாமல் இருக்கும்.

அதுபோல மாணவர்களும் அனைத்திலும் உயர்ந்தவர்களாக திகழ்ந்து சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். பெற்றோர்கள் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும்.

பிள்ளைகளின் நண்பர்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.
கோவை ஸ்ரீ ஹரி மருத்துவமனை மகளிர் மருத்துவ நிபுணர் சுதந்திரதேவி பேசுகையில், குழந்தைகளின் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் உள்ள பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கேற்ப தீர்வுகளை வழங்க வேண்டும். மனஅழுத்தம், இளமைப் பருவத்தில் ஹார்மோன் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பதை அறிய உதவ வேண்டும் என்றார்.

கேபிஆர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் ரேயாஸ் பேசுகையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மாணவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை குறிப்பிட்டார்.

சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதவும், வாழ்க்கையில் சிறந்ததொரு இடத்தை அடையவும் பெற்றோர் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img