பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளியின் 1984-1985 கல்வியாண்டின், பத்தாம் வகுப்பு முன்னாள் மாணவர்கள் சங்க இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை வகித்தார்.
போரசிரியர் வீ.அமர் நாதன் வரவேற்றார். துணை ஒருங்கிணைப்பாளர் காமராஜ் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். செந்தில் குமார், கருணாகரன், ஜோதிராஜ், சீனிவாசன், ராஜசேகர், ஜான் சகாயம் ஆகியோர் அன்றைய கால பள்ளி அனுபவங்களை நினைவு கூர்ந்தனர்.
முன்னாள் ஆசிரியர்களான தேவதாஸ், ரங்கசாமி, லட்சுமி, விஜயலட்சுமி, மகேந்திரன், நாகராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தங்களின் ஆசிரியர் கால அனுபவங்களையும், வித்யாலயத்தின் முக்கியத்துவம் குறித்தும், இதன் நிறுவனர் தி.சு.அவினாசிலிங்கம் குறித்தும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இவர்களுக்கு மாணவ, மாணவிகள் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகள் வழங்கி ஆசி பெற்றனர்.விழாவில் பங்கேற்க அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அ.சிவக்குமார், சங்கத்தின் சார்பில் ஏற்புரையாற்றினார்.
சங்க உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். துணை ஒருங்கிணைப்பாளர சென்னியப்பன் நன்றி கூறினார்.
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளியின் இளநிலை உதவியாளர் ராஜா, ரங்கராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



