fbpx
Homeபிற செய்திகள்விவோவின் புதிய ‘ஒய்21டி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோவின் புதிய ‘ஒய்21டி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

‘ஒய்’ மாடல் ஸ்மார்ட்போன் களின் விரிவாக்கத்தின் தொடர்ச் சியாக புதிய ‘ஒய்21டி’ என்னும் புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மிகவும் மெல்லிய தோற்றத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் தடையற்ற பயனர் அனுபவத்திற்கான சிறப்பு அம்சங்களைக் கொண் டுள்ளது. 4ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கார்டுடன் 16,490 ரூபாய்க்கு ஆப்லைன், ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதலாக 2 ஜிபி ரேம் வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

இது மிட்நைட் ப்ளூ மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய 2 வித வண்ணங்களில் ஜனவரி 3-ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. விவோவின் இந்த ஒய்21டி ஸ்போர்ட்ஸ் ஸ்மார்ட்போனின் 16.71 செ.மீ. புல் எச்டி இன்செல் டிஸ்ப்ளே பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதோடு, பிரகாசமான நிறங்கள் மற்றும் தெளிவான விவரங்களையும் வழங்குகிறது.

இது 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜ் மற்றும் விவோ எனர்ஜி கார்டியனுடன் வருகிறது. இதில் உள்ள ரிவர்ஸ் சார்ஜிங் வசதியானது இந்த ஸ்மார்ட்போனை பவர் பேங்காக மாற்றும்.

இதில் சிறந்த ஆற்றல்மிக்க ஸ்நாப்டிராகன் 680 புராசசர் பொருத்தப்பட்டுள்ளது. 128ஜிபி மெமரி கார்டுடன் பன்டச் ஓஎஸ் 12 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு இயங்கு தளம் 11-ல் செயல்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை பிரிவு இயக்குனர் யோகேந்திர ஸ்ரீராமுலா கூறியதாவது:
விவோவின் இளமையான ஒய்-மாடல் ஸ்மார்ட்போன்கள் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாக நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினரின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஸ்நாப்டிராகன் 680 புராசசருடன் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. கூடு தலாக, அனைத்து புதிய ஒய்21டி, வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img