தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள ஜெ.ஹரிஹரசுதனுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.சீனிவாசன், தமிழக மேலிட பொறுப்பாளர் ஆபிரகாம் ராய்மணி ஆகியோர் ஒப்புதலோடு ஜெ.ஹரிஹரசுதனை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஹசன் மௌலானா எம்எல்ஏ நியமனம் செய்துள்ளார்.
இதற்கு முன்பு மாணவர் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் செயலாளர், சேவாதள பிரிவு மாவட்ட தலைவர், ஐஎன்டியூசி மாவட்ட அமைப்பாளர், காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர், மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர், நீலகிரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் உள்ளிட்ட பல பதவிகளில் ஜெ.ஹரிஹரசுதன் பணியாற்றியுள்ளார்.



