உலக அளவில் புதுமை மிக்க ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ தனது ஒய் வரிசை மாடலின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக தனது புதிய ‘ஒய்21இ’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்னாப்டிராகன் 680 மொபைல் இயங்கு தளத்தில் இயங்கும் இந்த ‘ஒய்21இ’ பயனீட்டாளர்களுக்கு சிறப்புமிக்க கேமிங் அனுபவத்தை வழங்கும். சிறந்த கேமரா வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்.
பொங்கல் முதல் விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட்போன் இந்தியாவில் உள்ள அனைத்து ஆப்லைன் ஸ்டோர்களிலும் விவோ இந்தியா இ-ஸ்டோரிலும் மிட்நைட் ப்ளூ, டைமண்ட் க்ளோ ஆகிய 2 நிறங்களில் 12,990 ரூபாய் (விலை ரூ.16,990) சலுகை விலையில் கிடைக்கிறது. 3ஜிபிரேம், 64ஜிபி மெமரி கார்டுடன் வெளிவந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக ரேம் பொருத்தும் வசதியும் உள்ளது.
இதில் உள்ள 16.55 செ.மீ. (6.51-இன்ச்) எச்டி+ ஹாலோபுல் வியூடிஸ் பிளே மற்றும் செல்டெக்னாலஜியுடன் ஒரு அதிவேகமான பார்வை அனுபவத் திற்கான, கண்கவர் வண்ணங்கள் மற்றும் தெளிவான விவரங்களை வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 18 வாட்ஸ்பாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இது ஸ்மார்ட்போனை பவர்பேங்காக மாற்றும் தன்மை கொண்டதாகும். இதை பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் 64ஜிபி ரேம் மற்றும் பன்டச் ஓஎஸ் 12-ன் நினைவக திறன் கொண்ட ஸ்னாப் டிராகன் 680 மொ பைல் இயங்குதளத்தின் வேகமான மற்றும் மென்மையான கிராபிக்சின் ஆற்றலை அனுபவிக்க முடியும்.
விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனைப் பிரிவு இயக்குனர் யோ கேந்திர ஸ்ரீராமுலா கூறியதாவது: இந்த ஸ்மார்ட்போன் மூலம் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை வழங்குவதன் மூலம் பயனர்களுக்கு பிரீமியம் அனுபவம் கிடைக்கும்.
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பலதரப்பட்ட விலையில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் எங்களின் வளர்ச்சி மேலும் வலிமை பெறும் என்று நம்புகிறோம் என்றார்.



