fbpx
Homeபிற செய்திகள்விதை சேமிப்பு கிட்டங்கி கட்டிடம் - அமைச்சர் மனோதங்கராஜ் திறப்பு

விதை சேமிப்பு கிட்டங்கி கட்டிடம் – அமைச்சர் மனோதங்கராஜ் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், வடக்கு தாமரைக்குளம் ஊர £ட்சி, வழுக்கம்பாறை கிராமத்தில், புதிய துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்பு கிட்டங்கியை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

அமைச்சர் கூறியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையிலான தமிழக அரசு, வேளாண்மை உற்பத்தித் திறனை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கி அவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்திட, விவசாயிகளுக்கு தரமான இடு பொருட்கள் கொடுப்பதற்காகவும், வேளாண்மை விரிவாக்க பணிகளை செவ்வனே மேற்கொள்வதற்காகவும், கிராமப் புறங்களிலும், வேளாண்மை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

தமிழகஅரசு, வேளாண்மை – உழவர்நலத்துறை பணியாளர்கள் மூலம் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு பல்வேறு கூட்டங்கள், செயல் விளக்கங்கள், பயிற்சிகள் அளித்து விவசாயிகள் பயன் பெறும் வகையில் உழவர் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக அகஸ் தீஸ்வரம் வட்டம், வடக்கு தாமரைக்குளம் ஊர £ட்சி, வழுக்கம் பாறை கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பில் புதிய துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கு கட்டி முடிக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திறந்து வைக்கப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கு கட்டிடத்தில், விதைகள், நடவுப் பொருட்கள், இயற்கை உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் இவற்றை விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு சேமித்து வைக்கவும், பின்னர் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு, அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) சத்தியஜோஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எம்.ஆர்.வாணி, வேளாண்மை துணை இயக்குநர் அவ்வை மீனாட்சி, உதவி இயக்குநர் (வேளாண்மை) ஆர்.சுரேஷ், செயற் பொறியாளர் பொறி.ஸ்வர்ணலதா, உதவி செயற்பொறியாளர் பொறி.எ.மகேஷ், உதவி பொறியாளர் பொறி.பால முரளி மற்றும் பலர்கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img