பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கு மற்றும் வாடிக்கையாளர் வசதிகளை மேம்படுத்து வதற்கான அவரது தொட ர்ச்சியான முயற்சிக்கு ஏற்ப, இந்தியன் ஆயில் நிறுவனம், அனைத்து வகை வாடிக்கையாளர்களுக்கு புதிய எல்பிஜி இணைப் பைப் பெறுவதற்காக மிஸ்டுகால் வசதியை ஏற் படுத்தித் தந்துள்ளது.
நாடெங்கிலும் விருப்பமுள்ள வாடிக் கையாளர்கள் 8454955555 எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், வீடு தேடி வரும் புதிய எல்பிஜி இணைப்பு.
ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளில், தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதியை இந்தியன் ஆயில் மட்டுமே அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா கூறியதாவது:
நேற்றைவிட இன்று சிறப்பானதைத் தர வேண் டும் என்கிற நோக்கத்துடன் நாங்கள் செயலாற்றி வருகிறோம்.
இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான முறை யில் புதிய தொழில் நுட்பம் சார்ந்த புத்தம் புது வசதிகளை வழங்கி வருகிறோம்.
இந்த மிஸ்டு கால் வசதி என்பது எல்பிஜியை எளிதாகப் பெறுவதற்கு முக்கியமான பங்காற்றும் என்பதில் ஐயமில்லை. இதுவே வாடிக்கையாளர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்ப டுத்தும்.
ரீபில் புக்கிங் செய்வதற்கும் புதிய இணைப்புகளுக்கும் மிஸ்டு கால் வசதி, குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிக்கல் ஏதுமில்லாத இந்த மிஸ்டு கால் வசதி, புதிய இணைப்பு பதிவு செய்வதற்கு, வாடிக் கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், சௌகர்யமானதாகவும் இருக்கும். மூத்த குடிமக்களுக்கும் ஊர கப் பகுதிகளைச் சார்ந் தவர்களுக்கும் இது நன்மை பயக்கும்.
எல்பிஜி ரீபில் புக்கிங் செய்வதற்கும் பேமென்ட் செலுத்துவதற்கும், இந்தியன் ஆயில் நிறுவனமானது, தொழில்நுட்பத்தின் பயன் பாட்டை உபயோகத்தில் கொண்டுவந்துள்ளது. வாடிக்கையாளர்கள், பாரத் பில்பேமென்ட்சிஸ்டம், IndianOil One App என்கிற செயலி மூலமாக அல்லது https://cx.indianoil.in/ என்கிற வலைதளம் மூலமாக புக் செய்து பேமென்ட் செலுத்தலாம்.
வாட்ஸ் அப் எண் 758888882 மூலமாக, எஸ்எம்எஸ் / ஐவிஆர் எஸ் (SMS / IVRS)(7718955555) மூலமாக வாடிக்கையாளர்கள் புக் செய்து பேமென்ட் செலுத்தலாம். அல்லது அமேசான் மற்றும் பேடிஎம்Amazon & Paytm)தளங்களில் அலேக்சா (Alexa) மூல மாகவும் புக் செய்து பேமென்ட் செலுத்தலாம் என்றார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லத்திலேயே, இரட்டை இணைப்பு பெறும் வசதியையும் (Double Bottle Connection) எஸ்.எம்.வைத்தியா தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தின்கீழ், சிங்கிள் கனெக்ஷன்(SBC) வைத்துள்ளவர்களுக்கு இரட்டை சிலிண்டராக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை டெலிவரி பணியாளர் எடுத்துக் கூறுவார்.
இரண்டு சிலிண்டர் முறைக்கு மாறிக் கொள்ளலாம் அல்லது வழக்கமான 14.2 கிகி சிலிண்டருக்குப் பதிலாக, தயார் நிலைக்காக, 5 கிகி சிலிண்டர் பெறும் வழி முறைறையும் அவர்கள் பெறலாம். இவ்வாறு இந்தியன் ஆயில் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



