விருதுநகர் ச.வெள் ளைச்சாமி நாடார் பாலி டெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆவடையாபுரம், சுப்பையாபுரம் பகுதியில் முகாம் துவங்கப்பட்டுள் ளது.
இம்முகாம் மூலம் என் எஸ்எஸ் மாணவர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். முகாமில் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஹெச்ஐவி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு (ஆயுதப்படை எஸ்.மரியஅருள்), கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் விழிப்புணர்வு (டாக்டர் கிரென்சிடெனிலா), புகையிலை தீங்கு பற்றிய விழிப்புணர்வு (ராமசாமி எச்.ஐ.), சைபர் கிரைம் விழிப்புணர்வு (சைபர் கிரைம் எஸ்.ஐ.முத்துகுமார்), சுற்றுச் சூழலில் நெகிழி யின் தாக்கம் (ஆர்.சரவணக்குமார், எஸ்.டி. சரவணன், வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக்கல்லூரி), இலவச மருத்துவ முகாம் மற்றும் வீட்டு உபயோக மின்சாதனைங்களை இலவசமாக பழுதுபார்த் தல் ஆகியவை நடைபெற உள்ளன.
துவக்க விழாவில் வி.எஸ்.வி.என். பாலி டெக்னிக் கல்லூரி செய லாளர் பி.எம்.எஸ். என்.கே.டி.ராஜவேல், உபதலைவர் எம்.எஸ். கே.ரவிசங்கர், ஆவடை யாபுரம் பஞ்சாயத்து தலைவர் நல்லமுகமது, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நளினி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.
முகாம் ஏற்பாடுகளை பயிலக முதல்வர் டாக் டர் எஸ்.ஜவஹர், நாட்டு நலப்பணித் திட்ட அலு வலர்கள் பி.பரமேஸ்வரன், வி.முத்துவேல் செய்துள்ளனர்.



