உலகின் கலை நயமிக்க நகைகளின் கண்காட்சி, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வேலூர் ஷோரூமில் வரும் 10-ம் தேதி வரை நடை பெறுகிறது.
நகைகள் ஒவ்வொன்றும் கலைஞர் களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலை நயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளன.
கண்காட்சியை வேல்முருகன், தாவூத், கந்தவேல் ஆகியோர் நேற்று (ஜன.7) தொடங்கி வைத்தனர். வரும் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. வேலூர் மலபார் கோல்டு கிளை தலைவர் அனீஸ், கிளை துணைத் தலைவர் முகமது அஷூர் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280 -க்கும்மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன், மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமந £தபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் 17 கிளைகளை கொண்டுள்ளது.
மலபார் கோல்டு டைமண்ட்ஸ் விற்பனையகத்தில், அணிந்தாலே ஜொ லிக்கும் வைரநகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய நகை வடிவமைப்புகளில் உருவான ‘டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நகைகளை சிறப்பு சலுகையில் வாங் கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் 2022 ஆண்டு உலகளாவிய விரிவாக்கத்திற்கு ஆயத்தமாகிறது.
இந்தியா மற்றும் வெளி நாடுகளில் ஜனவரி மாதத்திலேயே 22 புதிய ஷோரூம்களை துவக்குகிறது. இந்தியாவில் ஒரு சில்லறை வர்த்தக நிறுவனம் ஒரே மாதத்தில் இந்தளவில் ஷோரூம்களை துவக்குவது இதுவே முதல் முறையாகும்.
இதற்காக ஜனவரி 2022-ம் ஆண்டு மட்டும் ரூ.800 கோடி அளவில் முதலீடு செய்கிறது.



