கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்த தினமான இன்று கோவை மத்திய சிறைச்சாலை முகப்பில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு அருகில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அருகில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை கோவை சரக துணைத்தலைவர் சண்முகசுந்தரம், கோவை மத்தியசிறைச்சாலை கண்காணிப்பாளர் ஊர்மிளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட பலர் உள்ளனர்.



