fbpx
Homeபிற செய்திகள்ரூ.15 கோடி மதிப்பில் 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும்: வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம்:...

ரூ.15 கோடி மதிப்பில் 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும்: வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ரூ.15 கோடி மதிப்பில் 64,444 வேளாண் குடும்பங்கள் பயன் பெறும் வகையில் வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, கருணை அடிப்படையில் 87 பணியாளர்களின் வாரிசுதாரர்க ளுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ரூ.15 கோடி மதிப்பில், கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, கதிர்அரிவாள் ஆகிய வேளாண் உபகரண தொகுப்புகளை 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வழங்கிடும் அடையாளமாக 5 வேளாண் குடும் பங்களுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கென 14.8.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட முதல் தனி நிதிநிலை அறிக்கையில், அன்றாட விவசாயப் பணிகளை எளிதாக மேற்கொள்ளத் தேவைப்படும் மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள் அடங்கிய ‘‘வேளாண் உபகரணங்கள் தொகுப்பு” அரை லட்சம் விவசாயப் பெருமக்களுக்கு வழங்கப்படும் என்றும், இத்திட்டம் 15 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, வேளாண் உபகரணங்களான கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி மற்றும் இரண்டு கதிர்அரிவாள்கள் ஆகிய ஆறு உபகரணங்கள் அடங்கிய ரூ.3,000 மதிப்பிலான வேளாண் உபகரணங்கள் தொகுப்பு 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.15 கோடி மதிப்பில் வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்தின் வாயிலாக இவ்வேளாண் உபகரணங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு பொது விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியம் அல்லது ரூ.2250 மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 90 சதவிகித மானியம் அல்லது ரூ.2700 மிகாமலும் வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும்.

ஒரு வேளாண் குடும்பத்திற்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.
இத்திட்டமானது சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.

சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின விவசாயிகளுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். உழவன் செயலி வாயிலாக விருப்பமுள்ள விவசாயிகள் பதிவு செய்து பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக சிறு, குறு விவசாய பெருமக்களின் உழைப்பு திறன் மேம்படுத்தப்பட்டு, உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

அதனைத் தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 87 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழக முதல்வர் 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமய மூர்த்தி, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை, வேளாண்மை கூடுதல் இயக்குநர் (பணி மேலாண்மை) ஸ்ரவன் குமார் ஜடாவத், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமை பொறியாளர் முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img