ராயல் கேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு துறை சார்பாக ஐ.சி.யூ.அப்டேட்ஸ் எனும் மருத்துவ கருத்தரங்கம் அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. செப்சிஸ் அண்ட் ட்ரோபிக்கல் இன்பெக்சன்ஸ் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே . மாதேஸ்வரன் தலைமை தாங்கினார்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர் வி.ழி.. சிவக்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர் விவேகானந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கலா மாதேஸ்வரன் மற்றும் டாக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தனர். தலைமை விருந்தினராக சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர் ராம். இ.ராஜகோபாலன் கலந்து கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதுள்ள சவால்கள் மற்றும் நவீன உபகரணங்களை இளம் மருத்துவர்கள் அறிந்து கொள்வதன் பயன்கள் குறித்து பேசினார்.
முன்னதாக இளம் சுவாச சிகிச்சை நிபுணர் சதிஷ் எழுதிய பேசிக் உயிர் காக்கும் உயர் சிகிச்சை (Basic Life Support) எனும் நூலை டாக்டர் கே.மாதேஸ்வரன் வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தீவிர சிகிச்சை துறையில் தற்போது சவால்களாக உள்ள செப்சிஸ் எனும் சிறிய வகை கிருமிகளில் இருந்து நோயாளிகளை காப்பாற்றுவது, மருத்துவர்கள் இது குறித்து தெரிந்து கொள்வதும், தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதைய நவீன முறை உபகரணங்கள் குறித்து மருத்துவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கருத்தரங்கு நடைபெறுவதாக தெரிவித்தார்.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தீவிர சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.



