கோவை வந்த சிர்ரா பாராளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கல் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி காமராஜா ஐ.பி.எஸ். ஆகியோருக்கு அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.
கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி உற்சவ நாற்று நடவு விழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
மழை வளம், இயற்கை வளம் பெற்று மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டா டப்படும் இந்த விழாவில் கலந்து கொள்ள தேவேந் திர குல வேளாளர் சமூ கத்தை சேர்ந்த சிர்ரா பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சுனிதா துக்கல் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி காமராஜா ஆகியோர் கோவை வந்தனர்.
இந்நிலையில் கோவை வந்த இருவருக்கும் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலை மையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றுதல் கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கலிடம் மனு வழங்கப்பட்டது.
மனுவை வாங்கிய அவர், இது குறித்து பாராளுமன்றத்தில் பேச உள்ளதாகவும், மேலும் பிரதமரை சந்தித்து தேவேந்திர குல வேளா ளர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து பேச உள்ளதாகவும் உறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் மகேஷ், செல்வம், உத்தமன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.



