fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக டி.பாஸ்கர பாண்டியன் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக டி.பாஸ்கர பாண்டியன் நியமனம்

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு:

“1. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்துவரும் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாநில திட்டக் கமிஷன் உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  1. மாநில திட்டக் கமிஷன் உறுப்பினர் செயலாளராக பதவி வகித்துவரும் டி.பாஸ்கர பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்” இவ் வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img