உதகை, அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் 124வது மலர் காட்சியை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல வண்ண மலர் செடிகளைக் கொண்டு மலர் பாத் திகளை அமைக்க விரி வான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனை கருத்தில்கொண்டு முதற்கட்டமாக சால்வியா, டெல்பீனியம் பென்ஸ்டி மன் மற்றும் டிஜிட்டாலிஸ் போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியானது வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் ஆகியோரால் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
இவ்வாண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பய ணிகளை கவரும் வகையில் ஜெரேனியம், சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரெனுன்குலஸ் மற்றும் பல புதிய இரக ஆர்னமென்டல்கேல், ஓரியன்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பென்டாஸ், பிரன்ச் மேரி கோல்டு, பேன்சி, பெட் டுனியா, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஸ் டாக், வெர்பினா, சன்பி ளவர், சிலோசியா, ஆன்டி ரைனம், வயோலா, லைமோனியம், ட்யூபர் பிகோனியா, அஸ்டில்மே, ரட்பெக்கியா, டொரினியா, – போன்ற 275 வகையான விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி “மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுக ளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களி லுருந்தும் பெறப்பட்டு மலர்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
நடவு செய்யப்படும் மலர் நாற்றுகளுக்கு பனியின் தாக்கம் ஏற்படாத வண் ணம் கோத்தகிரி மிலார் செடிகளைக் கொண்டு பாதுகாப்பு செய்யப்படும்.
இவ்வாண்டு எதிர்வரும் மலர் காட்சியினை யொட்டி மலர்காட்சி மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் 35000 வண்ண மலர் தொட்டி செடிகள் வைக்க விரிவான ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகின்றன.
இந்த தகவலை தோட்டக்கலை இணை இயக்குநர் தெரிவித்துள் ளார்.



