முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவஹர் நகரில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.



