நீலகிரி மாவட்டம் உதகை ஹோட்டல் சலைவன் கோர்ட் கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், நடைபெற்ற மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை கருத்தரங்கில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் 3 விவசாயிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் மானியத்தில் மினி டிராக்டர்களை வழங்கினர்.
உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி உட்பட பலர் உள்ளனர்.



