வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மையே என ஒன்றிய அரசு கூறுகிறது. இந்த சட்டத்திருத்தத்தால் கார்ப்பரேட்டுகளே பலன் பெறுவார்கள், எங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது, எங்கள் வாழ்வாதாரமே அழிந்துவிடும் என்கின்றனர் விவசாயிகள்.
ஒரு அரசானது மக்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டுமே தவிர தங்களது விருப்பத்தை மக்களை ஏற்கச் சொல்லி கட்டாயப் படுத்தக்கூடாது.
சுமார் ஓராண்டாகத் தொடரும் விவசாயிகள் போராட்டத்தை நியாயமான வழியில் முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய அரசு முயல வேண்டும். மாறாக அப்பாவி விவசாயிகள் மீது வாகனங்களை ஏற்றி, வன்முறையை தீர்வாக்கி முடிவுக்கு கொண்டு வர ஒரு போதும் முயலக்கூடாது.
தமிழகம் உட்பட பல மாநில அரசுகளும் எதிர்க்கும் வேளாண் திருத்தச் சட்டங்களை ஒன்றிய அரசு விரைவில் திரும்பப் பெற வேண்டும் என்பதே மக்கள் மற்றும் விவசாயிகளின் விருப்பம் ஆகும்.



