குடும்பங்களுக்குள் சமத்துவத்தை மேம்படுத்தும் விதமாக ‘ஷேர் தி லோட்’ (ShareThe Load) எனும் பிரச்சாரத்தின் 5-வது பதிப்பு வெளிடப்பட்டது.
ஏரியல் இந்தியா நிறுவனமானது குடும்பங்களுக்குள்ளேயே வீட்டு வேலைகளை சமமற்ற முறையில் பிரிப்பது குறித்து தொடர்ந்து உரையாடலையும், சிந்தனைகளையும் மேற்கொண்டு வருகிறது.
வீட்டின் அன்றாட பணிகளை பெண்களுக்கு இணையாக ஆண்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் முன்முயற்சியை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது ஏரியல் இந்தியா.
இந்த உரையாடலைத் தொடரவும், குடும்பங்களுக்குள் சமத்துவத்தை மேம்படுத்தவும் ‘ஷேர் தி லோட்’ முன் முயற்சியின் 5-வது எடிஷனை துவங்கும் விதமாக சமமாக பார்க்கவும் (SeeEqual) எனும் குறும்படத்தை வெளியிட்டுள்ளது.
அதாவது, “ஆண்கள் மற்ற ஆண் களுடன் சமமாக சுமையை பகிர்ந்து கொள்ள முடியும் என்றால், அவர்கள் ஏன் அதை தங்கள் மனைவிகளுடன் செய்யவில்லை?”, ஏரியல் ஆனது ஆண்களை வீட்டுப் பணிகளில் பெண்களுடன் சம பங்கு வகிக்கும்படி வலியுறுத்துகிறது.
ஏரியலின் ‘ஷேர் தி லோட்’ முன்முயற்சியின் 5வது பதிப்பை வெளியிட பல்வேறு விருந்தினர்கள் கூடினர். அதில், ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் – நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்முனைவோர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், டாக்டர் நந்திதா ஷா ஆகியோரை உள்ளடக்கிய அக்ஷரா மையத்தின் ஒரு என்ஜிஓ – பாலின நீதி மற்றும் வன்முறை இல்லாத சமூகத்தை நிறுவுவதற்கான நோக்கத்துடன், அதற்காக அயராது உழைத்து வருகிறது.
ஷரத் வர்மா – தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, P&G இந்தியா, துணைத் தலைவர், ஃபேப்ரிக் கேர், P&G இந்தியா, ஜோசி பால் – தலைவர், தலைமை கிரியேட்டிவ் அதிகாரி,BBDO இந்தியா.
மேற்கண்ட அனைவரும் அடங்கிய பேனலுக்கு நடுவராக ஷிபானி தண்டேகர் கலந்து கொண்டார்.
பிரபல விருந்தினரான ஜெனிலியா டி’சோசா, ஏரியலின் ‘ஷேர் தி லோட்’ இயக்கத்தின் துவக்கமாக, “பெண்கள் தங்கள் பார்ட்னரால் சமமாக பார்க்கப்படாவிட்டால், அவர்கள் உறவில் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியா தவர்களாகிறார்கள்” என்ற செய்தியை முன்வைத்தார்.



