fbpx
Homeபிற செய்திகள்பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு: கோவை ஆட்சியர் வழங்கினார்

பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு: கோவை ஆட்சியர் வழங்கினார்

தமிழ்வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின் படி, நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களில் அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் 16 பேர் மற்றும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 20 மாணவ/மாணவியர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, – இரண்டாம் பரிசு ரூ.3,000,- மூன்றாம் பரிசு ரூ.2,000, மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு ரூ.2,000, மேலும் திருக்குறள் முற்றோதல் செய்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000- க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img