நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியதில், 165 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் 1792 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 5912 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அவருடைய பெருங்கனவு என்னவென்றால், படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான்.
நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு இளைஞர்களையே சாரும் என்பதால், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரும் வகையில் தொடர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அறிவுறுத்தியுள்ளார்.
படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவது தமிழக அரசின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.
நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் டி.என்.பி.எஸ்.சி, துறை தேர்வுகள், வங்கி பணிக்கான பயிற்சி வகுப்புகள் போன்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன.
வேலை இணையம்
தமிழகத்தில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும், இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளம் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளம் ஆகும்.
இளைஞர்கள் இவ் இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களுக்கேற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார் துறை நிறுவனங்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்குவதற்கும், இவ் இணையதளம் வழிவகை செய்கிறது.
இலவச சேவை
வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இச்சேவை, கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 7.12.2021 அன்று தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலையம், கூடலூரில் நடைபெற்றது.
முகாமில் 33 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 265 நபர்களை தேர்வு செய்தன. இதில் 1040 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர்.
29.12.2021 அன்று பழங்குடியினர் பண்பாட்டு மையம், உதகையில் நடைபெற்ற முகாமில் 60 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 248 நபர்களை தேர்வு செய்தன.
இதில் 1401 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர். 12.05.2022 அன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற முகாமில் 165 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 1279 நபர்கள் என மொத்தம் 1792 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 5912 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர்.
“தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளத்தில் வேலை”
வேலைவாய்ப்பு பெற்ற அப்துல் ரஹ்மான் கூறியதாவது:
குன்னூர் சிம்ஸ்பார்க் பகுதியில் வசித்து வருகிறேன். பி.காம். படித்து முடித்து விட்டு, சரியான வேலை இல்லாத காரணத்தினால் கிடைக்கும் வேலையை செய்து வருகிறேன்.
இத்தருணத்தில் 12.05.2022 அன்று உதகையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக நாளிதழ்களின் மூலம் தெரிந்து கொண்டு பங்கேற்றேன். என் தகுதியின் அடிப்படையில் ஏ.பி.அகாடமியில் சாப்ட் ஸ்கில் ட்ரெய்னராக ரூ.18,000/- சம்பளத்தில் வேலை கிடை த்தது.
இந்த வேலை எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பணி நியமன ஆணையினை, முதல்வரிடம் இருந்து 21.05.2022அன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நேரில் பெற்றது, மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சிய £கவும் உள்ளது.
இதே போன்று பல்வேறு வேலைவாய்ப்பு முகாமினை நடத்தி பலரின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த வேண்டும். என்னைப்போன்ற இ¬ ளஞர்கள் சார்பில் முதல்வ ருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
“ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை”
வேலைவாய்ப்பு பெற்ற வி.பிரவீன் கூறியதாவது:
கைகாட்டி, கோமதிபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்து முடித்துள்ளேன். 12.05.2022 அன்று பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றேன்.
வேலைவாய்ப்பு முகாம் மூலம் எனக்கு ரூ.10,500/- சம்பளம் மதிப்பில், கோவையில் உள்ள ஜெய்கிருஷ்ணா ஆட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சர்வீஸ் அட்வைசர் பணி கிடைத்தது. இது மிகவும் மகிழ்ச்சியாகவும், குடும்பத்திற்கு பேருதவியாகவும் உள்ளது.
இது போன்றதொரு வேலை வாய்ப்பு முகாமினை மாவட்டங்கள் தோறும் நடத்தி, என்னைப் போன்ற இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கேற்றி வைத்த முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
படித்து முடித்த இளைஞர் களுக்காக தொட ர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக செயல்படுத்தி வரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு, நீலகிரி மாவட்ட இளைஞர்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தொகுப்பு:
நி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
நீலகிரி மாவட்டம்.



