மருத்துவர் கண்ட கனவினால் உலகத் தரத் திற்கு உயர்ந்தது கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. தாராபுரம் இல்லியம்பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்து, தற்போது கோவை மெடிக்கல் சென் டர் மற்றும் மருத்துவம னையில் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார் டாக்டர் லெனின் பாபு.
இவர் தனது கிராமத்தில் அடர்வனம் (சிறு காடு) என்ற நோக்கில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.
டாக்டர் லெனின் பாபுவின் முயற்சியினால், கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த 3d ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாகி உள்ளன.
இது பற்றி டாக்டர் லெனின் பாபு கூறியதாவது: பிச்சை புகினும் கற்கை நன்றே… என்று கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப் படுத்துகிறார் திருவள் ளுவர்.
அனைவருக்கும் சமமான கல்வி என் பதே எனது முக்கிய குறிக்கோளாக உணர்கி றேன். ஒரு சிறந்த கல்விக் கூடம் மிகச்சிறந்த மாணவர்களை உருவாக் கும் என்பதில், எந்தவித சந்தேகமுமில்லை.
என்னுடைய தங்கையான கல்பனா, தலைமை ஆசிரியையாக பணிபுரிகின்ற கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து, இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து பள்ளிக்கூடங்களிலும் வரப்போகின்ற ஆகு மேண்டின் ரியாலிட்டி என சொல்லப்படுகின்ற உலகத்தரம் வாய்ந்த 3d ஸ்மார்ட் வகுப்பறைகளை தற்போதே புரொஜெக்டர், கணினிகள் துணையுடன் கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உருவாக்கியுள்ளோம்.
பழைய கட்டிடங்களை புதுப்பித்தும், புதிய மேசைகள், நாற்காலிகள், கணினிகள், மின் விசிறிகள், 800 சதுர அடிகளுக்கு பால்ஸ் சீலிங், சுத்திகரிக்கப்பட்ட RO குடிநீர் வசதிகள், மாணவர்களின் பாதுகாப்பிற்கு CCTV கேமரா, மண் தரைகளை மாற்றி பேவர் பிளாக்ஸ் தரைகள், சுத்தமான கழிவறை வசதிகள் அமைத்துள் ளோம். இதன் மூலம் கரையூர் தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.
சுமார் 15,00,000 ரூபாய் செலவில் ஆறு மாதங் களாக திட்டமிட்ட இப்ப ணிகளுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டர்கள், தொண்டு நிறுவனங்கள் கோவை மற்றும் சிறுமுகை ரோட்டரி கிளப், சிறுமுகை SIV பள்ளி மாணவர்கள் அமைப்பு, ஸ்டான்லி முன்னாள் மருத்துவ மாணவர்கள் அமைப்பு, கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட்டல் மருத்துவர் குழு, தாராபுரம் விழுதுகள் பவுண்டேசன், காளிபாளையம் நன்னயம் அறக்கட்டளை, SMC குழு, கரையூர் மற்றும் இல்லியம்பட்டி ஊர் பொதுமக்கள் அனைவரும் பள்ளி என்ற உடனே நன்கொடை அளித்துள் ளனர். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
அரசு அனுமதித்தால் கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை போன்றே பல பள்ளிகளை மாற்றியமைக்க முடியும் என்றார்.



