fbpx
Homeபிற செய்திகள்மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும தலைமை அலுவலகம் சென்னையில் திறப்பு

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும தலைமை அலுவலகம் சென்னையில் திறப்பு

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தலைமை அலுவலகம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிட திறப்பு விழா நடந்தது.

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சிப் பெற்ற அமைப்பாக செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமமானது 2010-ம் ஆண்டு மத்திய ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ குழுமத்திலிருந்து பிரிந்து தனி அமைப்பாக செயல்படுகிறது.

மத்திய சித்த மருத் துவ ஆராய்ச்சிக் குழுமம் 2010 முதல் 2012 வரை புதுடெல்லியில் செயல்பட்டுவந்தது. அதன்பிறகு 2012 முதல் 2022 வரை 10 வருடங்கள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

சித்த மருத்துவத்தின் முறையான வளர்ச்சிக் காகவும், அடிப்படையான கட்டமைப் புகளுக் காகவும் தாம்பரம் சானிடோரி யத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கான தலைமை அலுவலகம் கட்ட முடிவானது.

இதனுடன் 2004-ம் ஆண்டு இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தாம்பரம் சானி டோரியத்தில் இயங்கி வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அயோத்தி தாச பண்டிதர் வெளிநோயாளர் பகுதியின் புதிய விரிவாக்கக் கட்டிடமும் 35 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

இக்கட்டிடங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடந்தது.
மத்திய ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனர் பேராசிரியர் மரு.கே. கனகவல்லி வரவேற்றார்.

மத்திய ஆராய்ச்சிக் குழுமத்தின் புதிய தலைமை அலுவலகக் கட்டிடம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை, புதிய வெளிநோயாளர் பிரிவு, விரிவாக்க கட்டிடம் ஆகியவை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் முன்னிலையில், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் துறைமுகம், கப்பல் நீர்வழி போக்குவரத்துத்துறை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை தலைமைச் செயலர் மருத்துவர் பி. செந்தில் குமார், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் எஸ். கணேஷ், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர். பாலு, தாம்பரம் மேயர் கே. வசந்தகுமாரி, எம்.எல்.ஏ. எஸ். ஆர்.ராஜா ஆகியோர் பேசினர்.
இந்திய அரசின், ஆயுஷ் அமைச்சக சிறப்பு செயலர் கு. பிரமோத் குமார் பாடக் தலைமை தாங்கி பேசினார்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் மரு. இரா. மீனாகுமாரி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img