fbpx
Homeபிற செய்திகள்பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் மரம் நடும்விழா

பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் மரம் நடும்விழா

பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகளாக நீர் நிலைகளில் மரம் நடும் நிகழ்வு மேற்கொள் ளப்பட்டது.

இதில் பேரூராட்சி தலைவர் பு.சாந்தி, செயல் அலுவலர் கோ.நாகராஜன், பேரூராட்சி துணை தலைவர். செ.ஸ்ரீதர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது பில்பருத்தி புங்கன் குட்டையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மேலும் பொ.மல்லாபுரம் ரயில்நிலையம் நூழைவாயிலில் இருந்து சேலம் மெயின் ரோடு வழியாக பொதுமக்களுக் கான விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவரால் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img