fbpx
Homeபிற செய்திகள்பெண்களை மேம்படுத்தும் நோக்கில் சதுப்புநில, கடலோர மீன்வளர்ப்பை ஒருங்கிணைக்கும் திட்டம்

பெண்களை மேம்படுத்தும் நோக்கில் சதுப்புநில, கடலோர மீன்வளர்ப்பை ஒருங்கிணைக்கும் திட்டம்

சிறந்த பொருளாதார நிபுணரும் தொலைநோக்கு பார்வையாளருமான பேராசிரியர் டாக்டர்ராஜரத்தினம், கடந்த 1979-ம் ஆண்டு புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்குக்கான ஆராய்ச்சிமையம் (CRe NIEO) அமைப்பை துவக்கினார்.
சுற்றுச்சூழல், பாதுகாப்பு, இயற்கை வளங்களை நீடித்து நிர்வகிப்பதற்கு கடலே ரசமூகத்தினரை தயார் படுத்துதல் மற்றும் பொருளாதார சுய சார்புக்கான தொழில் முனைவோர்திறன்களை மேம்படுத்த தேவையான கல்வியை வழங்குதல், பழவேற்காடு ஏரி, தலித் மக்கள்மற்றும் பிற பழங்குடி மீனவ சமூகங்களின் பெண்கள் மற்றும் குழந் தகளின் கவலைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவைஅமைப்பின் நோக்கமாகும்.

பழவேற்காடு பஞ்சாயத்து-பழவேற்காட்டில் உள்ள குளத்துமேடு கிராமத்தில் இந்து சமூகத்தை சேர்ந்த 240 குடும்பங்களில் குறிப்பாக 30 இருளர் பழங்குடியின குடும்பங்கள், சிறிய வலைகள்மூலம் மீன்பிடித்தல், கைப் பிடித்தல் (மீன், இறால், நண்டு) மற்றும் குறிப்பிட்ட அளவிற்கு நண்டுகொழுப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முதன்மை தேசிய ஆராய்ச்சி நிறுவனங் களான – மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சிநிறுவனம் (RGCA ) மற்றும் ராஜீவ் காந்தி மீன்வளர்ப்பு மையம் (RGCA) மற்றும் நாட்டின் சிலநிபுணர்களால் தொழில்நுட்ப ரீதியாக இத்திட்டம் ஆதரிக்கப் படுவதன் மூலம் இருளர் பழங்குடியின மீனவ சமூகத்தைச் சேர்ந்த 40 பெண் பயனாளிகள் மாற்று வருமானம் ஈட்ட வழிவகை செய்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், க்ரீனியோ, மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம்,ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையம், வனம், கல்வி நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்மற்றும் பயனாளிகள் ஒருங்கிணைந்து, ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையம் மூலம்வழங்கப்பட்ட கொடுவா மீன், கலிநண்டு மற்றும் மீன் குஞ்சுகள் குளத்துமேடு கிராமத்தில்தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு குளங்களில் மேற்கொண்டு அதிக வளர்ச்சிக்காக விடப் பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக ஸிநிசிகி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர்கே.பி.ராஜேந்திரன், டாக்டர் ஏ.ஆர்.திருநாவுக் கரசு, முன்னாள் முதன்மை விஞ்ஞானி டாக்டர்எம்.கதிர்வேல், முன்னா ள் முதன்மை விஞ்ஞானி டாக்டர் செந்தில் முருகன், தற்போதைய ஸிநிசிகி சிறப்பு விஞ்ஞானி டாக்டர் சண்முக அரசு
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.RGCA யோ அமைப்பின் இயக்குனர் பேராசிரியர் டி.எஸ். லூதர் நன்றி தெரிவித்தார்.(RGCA)யோவின் உறுப் பினர் டாக்டர் மோசஸ் இன்பராஜ் வரவேற்றார். தேவதாசன் வின்சென்ட் திட்டத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img