தமிழகத்தில் 4,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளால் 1450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத் துள்ளதாக மத்திய இணை யமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமானம் மூலம் கோவை வந்தார். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக அவர் திருப்பூர் செல்கிறார்.
முன்னதாக, விமான நிலைய வாயிலில் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறியதாவது: இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் இன்று ஓரே நேரத்தில் திறக்கப்படுகின்றது.
4080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளால் 1450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதே போல செம்மொழி தமிழ் ஆய்வு மையம் இன்று 20 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது.
11 மருத்துவகல்லூரிகள் மட்டுமின்றி தமழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகளும் நடைபெற்று வருகின்றது. அதற்கென ஒரு காலவரம்பு இருக்கின்றது.
தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும். கட்டாயம் தமிழக மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



