சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில், கோவை பால சுந்தரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போக்கு வரத்து பயிற்சிப் பூங்காவின் 5-வது ஆண்டு விழாவை, மாநகர காவல் துறையும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமி டெட்டும் இணைந்து கொண்டாடின.
சிறு-நகர கருத்துருவாக் கத்தின் அடிப்ப டையில் போக்குவரத்து சிக்னல்கள், ஜீப்ரா கிராஸிங்குகள், வேகத்தடைகள் போன் றவற்றை உள்ளடக்கி உண் மையான சாலையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டது.
கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் வை ஏற்படுத்தும் வகையில், இத்திட்டம் தொடங்கிய நாள் முதல் அனைத்து வயதினருக்குமான அன் றாடப் பயிற்சிகளை வழங்கி வருகிறது ஹோண்டா டூவீலர்ஸ் இந்தியா.
இதன் மூலமாக, இதுவரை கோவையைச் சேர்ந்த 2.3 லட்சத்திற்கும் அதிகமானோர் (1.4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் புதி தாக, ஏற்கனவே வாகனம் ஓட்டும் வழக்கம் கொண்ட 87,000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்) பய னடைந்துள்ளனர்.
மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் பேசுகையில், ‘போக்குவரத்து பூங்காவை பார்வையிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதே புத்துணர்வுடன் இந்த செயல்பாடுகள் தொடர வேண்டும்.
மாநகரத்தில் மிகச்சிறப் பாக சாலை பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுவதில் காவல்துறை முக்கியப் பங்கு வகிக்கு மென்று உறுதியளிக்கிறேன்’ என்றார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வைப் பரப்புவது குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் பிராண்ட் கம்யூனிகேஷன் பிரிவு மூத்த துணைத் தலைவர் பிரபு பேசுகையில், ‘எதிர்கால வாகன ஓட்டுநர்களான 5 வயது குழந்தைகள் முதல் இன்று வாகனம் ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் வரை அனைவரும் இதில் அடங்குவர்.
புதி தாக வாகனம் ஓட்டும் பெண்கள் சுதந்திரமான பயனர்களாக உணரும் வகையில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
புதிய இயல்புநிலைக்கு மாறும் வகையில், ஹோண்டா சாலை பாதுகாப்பு இ-கு ருகுலம் எனும் டிஜிட்டல் திட்டம் வழியாக ஆரோக்கிய மான சாலை பாது காப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதைத் தொடரவிருக்கிறோம்’ என்றார்.



