ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை, வங்கியின் பாஸ்டேக்களைப் பயன்படுத்தி எச்பிசிஎல் சில்லறை விற்பனை நிலையங்களில் எரிபொருள் செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் பாஸ்டேக்குகள் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எச்பிசிஎல் சில்லறை விற்பனை நிலையங்களில் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வாங்கவும், ரீசார்ஜ் செய்யவும் மற்றும் மாற்றவும் முடியும்.
இந்தக் கூட்டாண்மை மூலம் எச்பிசிஎல் சில்லறை விற்பனை நிலையங்களில் ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் பாஸ்டேக்-ஐப் பயன்படுத்தும் ஐந்து மில்லியன் வாகன ஓட்டிகளுக்கு குறிச்சொற்களை வாங்குவதற்கும் பயன்படுத்துவதும் எளிதாகிறது.
மும்பையில் எச்பிசிஎல் மற்றும் ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கூட்டணி குறித்து ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் தலைமை இயக்க அதிகாரி பி மதிவாணன் கூறுகையில், ‘டிஜிட்டல்-முதல் வங்கியாக, போக்குவரத்து தொடர்பான அனைத்து கட்டணங்களையும் எளிதாக்குவதே எங்கள் முயற்சியாகும்.
ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பாஸ்டேக்குகளை வெளியிட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மில்லியன் பரிவர்த்தனைகள் இதன் மூலம் நடைபெறுகின்றன.
எச்பிசிஎல் உடனான எங்கள் கூட்டு வாடிக்கையாளர்களுக்கு பாஸ்டேக்குகளை பயன்படுத்தி எரிபொருளுக்கு பணம் செலுத்தும் வசதியை வழங்குகிறது’ என்றார்.
எச்பிசிஎல்-இன் சில்லறை விற்பனை பிரிவு இயக்குனர் சாய்குமார் சூரி கூறுகையில், ‘கடந்த நிதியாண்டில் எச்பிசிஎல் சில்லறை விற்பனை நிலையங்களில் பாஸ்டேக் அடிப்படையிலான எரிபொருள் வழங்கும் சேவையை முதன்முதலில் அறிமுகப்படுத்தினோம், ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் பாஸ்டேக்குகளை எங்கள் டிரைவ்ட்ராக் பிளஸ் திட்டம் மூலம் அறிமுகப்படுத்தினோம்.
எங்களது ‘எச்பி பே’ செயலி பயன்பாட்டில் ஐடிஎப்சி வங்கி பாஸ்டேக் மூலம் பணம் செலுத்துவதை இப்போது அறிமுகப்படுத்துகிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியுடன் பாஸ்டேக் மார்க்கெட்டிங் ஏற்பாட்டையும் முதல்முறையாக தொடங்குகிறோம்’ என்றார்.



