fbpx
Homeபிற செய்திகள்68 வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் செஞ்சேரிமலையடிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மண்...

68 வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் செஞ்சேரிமலையடிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மண் மற்றும் நீர் பரிசோதனை முகாம்

68 வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வாக செஞ்சேரிமலையடிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மண் மற்றும் நீர் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் சு.சதீஸ்குமார் தலைமையேற்று மண் மற்றும் நீர் பரிசோதனைகளை செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் வேளாண் பட்டதாரி ஈஸ்வரமூர்த்தி மற்றும் வட்டார கள அலுவலர், சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img