கல்குவாரியை எதிர்த்து பல்லடம் கோட £ங்கிபாளையத்தில் விவ சாயி தனி மனிதனாக உண்ணாவிரத போராட்டத் தை துவங்கி யுள்ளார். கோடாங்கி பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி விஜயகுமார்.
இவர், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடாங்கிபாளையத்தில் இயங்கி வரும் கல்குவாரிக்கு புதிதாக உரிமம் வழங்கியதை கண்டித்தும், முறைகேட்டைக் கண்டறிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டியும், தற்பொழுது வழங்கிய கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டியும் வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கல்குவாரியால் குடும்பத்துடன் இப்பகுதியில் வாழ முடியவில்லை என்றும், விவசாயமும் செய்ய முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கும் இவர் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.



