fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி பழங்குடியின பெண்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்- ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி ஏற்பாடு

நீலகிரி பழங்குடியின பெண்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்- ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி ஏற்பாடு

உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசிக் கல்லூரி, இந்திய அறிவியல் மற் றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து நீலகிரி மாவட்டம் மஞ் சக்கொம்பை மற்றும் நெடுகால்கொம்பை கிராம- பழங்குடியின பெண்கள் இடையே ‘மாதவிடாய் மற்றும் அதனை சார்ந்த சுகாதாரம்’ பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கினை நடத் தியது.

உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தலைமை யில் முனைவர் தீபலட்சுமி மணி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் மஞ்சக்கொம்பை கவுன் சிலர் மஞ்சை மோகன் முன்னிலை வகித்தார்.

மஞ்சக்கொம்பை உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா, இடை நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ், விளையாட்டுத் துறை ஆசிரியர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மருந்தியல் மருத்துவர்கள் சி கீர்த்தனா, அணீனா ஆகியோருடன் தன்னார் வலர் மேரி யேசுதாஸ் ஆகி யோர் கலந்துக் கொண்டு மாதவிடாய் மற்றும் அதனை சார்ந்த சுகாதாரம் பற்றிய அறிவியல் சார்ந்த விழிப்புணர்வுக் கருத்து களை பயனாளிகளிடம் பகிர்ந்ததுடன் அவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.

மேலும், இத்தகையக் கருத்துக்களை கிராமத்தில் உள்ள மற்றவர் களுக்கும் பரப்புரை செய் யுமாறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள் மற்றும் கிராம பெண்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பங்குபெற்ற சுமார் 100 பயனாளிகளுக்கு சானிடரி நாப்கின், சானிடைசர், டெட்டால் மற்றும் சோப் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img