fbpx
Homeதலையங்கம்நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் தற்போதைய அவசியம்

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் தற்போதைய அவசியம்

கொரோனா தடுப்பூசி மருந்துகளை முகாம்கள் மூலம் பொதுமக்களுக்குச் செலுத்துவதில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை எடுத்துக்கொண்டிருக்கும் கவனம் ஆரோக்கியமானது.

மத்திய அரசின் ஒத்துழைப்பு நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நோய் தடுப்புப் பணிகள் தொய்வில்லாமல் வீதிக்கு வீதி நடப்பது சிறப்பானது, பாராட்டுக்குரியது.
இப்போது தமிழ்நாடு அளவில் ப்ளூ காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் வீரியப்பட்டிருக்கின்றன.

தொடர் மழையினால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. கொசுக்கள், மருந்துகளை கேலி செய்து விட்டு ரத்தம் உறிஞ்சுகின்றன. வெவ்வேறு மழைக்கால நோய்கள் இந்தியா முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றன.

சென்னையில் மட்டும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 3000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிக்கென்றே ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கொசு தேங்கும் இடங்களை சுத்தப்படுத்தும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

கொசு உற்பத்தி இடங்கள் கண்டறியப்பட்டால் அபராதம் என்ற எச்சரிக்கை கூட விடுக்கப்பட்டிருக்கிறது. கல்லூரிகள் மட்டுமல்ல பள்ளிகளும் திறக்கப்படும் நேரம் இது என்பதால் எல்லாவற்றிற்கும் அரசையே கை காட்டாமல் நாமும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

எந்தத் தொற்றும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டப்படும் தனி மனித நிலையை மாற்றிக்கொண்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது தான் தற்போதைய அவசியம்.

படிக்க வேண்டும்

spot_img