திருப்பூர் அவினாசி ரோடு டி.எஸ்.கே. ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணி தொடங்கப்பட்டது.
இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை, கிராஸ்ப் கிளாத்திங் திருப்பூர் மாநகராட்சியுடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், இன்று தொடங்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார், கிராஸ்ப் கிளாதிங்ஸ் உரிமையாளர் துரை, கவிதா ஜெனார்த்தனன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.6 லட்சம் ஆகும்.
ஹெலத் கேர் சென்டருக்கு ரூ.25,000 மதிப்புள்ள மருத்துவ உப கரணங்களையும் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.



