நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலை யில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 7 முனை போட்டி நிலவும் நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிர மாக ஈடுபட்டுள்ளன. தமிழ கத்தில் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறி வித்தது. அதன்படி, 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்க ளும், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 490 பேரூ ராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் என மொத்தம் 12,838 பதவி யிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவியிடங்களுக் கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடைபெற உள்ளது. மொத்தம் 31,029 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 1,37,06,793 ஆண் வாக்காளர்களும், 1,42,45,637 பெண் வாக்கா ளர்களும், 4.324 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,79,56,754 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
மேலும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் காய்ச்சல் பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காகாணிக்க மாவட்ட, உள்ளாட்சி அமைப்பு களுக்கு ஒருங்கிணைப்பு சுகாதார அதிகாரி நிய மிக்கப்படுவார் என குறிப் பிட்டுள்ளது.
இம்முறை நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் கூட்டணி, அதிமுக மற்றும் கூட்டணி, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, திமுக அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் குழு அமைத்து வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்துவிட்டது. இதேபோல், தேர்தலில் அதிகமாக இடங்களை கேட்டு பாஜகவும் அதிமுக விற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக குறித்து தரம் தாழ்ந்த விமர்சனங்களை தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் வரை யில் பாஜவுடனான கூட்ட ணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அதிமுக தலைமை என்ன செய்வதென்று தெரியா மல் குழப்பத்தில் ஆழ்ந்து போய் உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும் பிப்ரவரி 4ம் தேதி வரையில் வேட்பு மனுக் கள் பெறப்படும். பிப்ரவரி 5ம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும். பிப்ரவரி 7ம் தேதி வேட் புமனுக்களை திரும்பப் பெறலாம். இதை தொடர்ந்து, 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் எண்ணும் பணி பிப்ரவரி 22ம் தேதி அன்று காலை 8 மணிக்கு தொடங்கும். இதையடுத்து, பிப்ரவரி 24ம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெற்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மார்ச் 2ம் தேதி பதவி ஏற்பார்கள்.
இந்த நிலையில், நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், அன் பில் மகேஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்ற னர். திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டா லினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதேபோல தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி னார். அதன் பின்னர், தமிழக வாழ்வுரிமை கட்சி வலுவாக உள்ள இடங்களில் போட்டியிட முதல்வரிடம் விருப்பம் தெரிவித்துள்ளோம் என வேல்முருகன் பேட்டியளித்தார்.



