fbpx
Homeபிற செய்திகள்தேசிய பில்லியர்ட்ஸ் போட்டியில் தங்கம் வென்ற கோவை வீராங்கனை

தேசிய பில்லியர்ட்ஸ் போட்டியில் தங்கம் வென்ற கோவை வீராங்கனை

சென்ற 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் பெடரேஷன் ஆப் இந்தியா மற்றும் எஸ்ஏஜிஇ பல்கலைக்கழகம் சேர்ந்து நடத்திய தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட் டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், புதுச்சேரி, டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்திற்காக கோவையை சேர்ந்த வீராங்கனை சிநேந்ரா பாபு கலந்து கொண்டு 18 வயதுக்குட்பட்டோர் பில்லியர்ட்ஸ் பிரிவில் தங் கம் வென்று சாதித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டத்தில் இருந்து தேசிய அளவிலான தங்கப் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதே போட்டியில் 21 வயதுக்குட்பட்டோர் பில்லியர்ட்ஸ் பிரிவில் வெண்கலம் வென்று மொத்தம் இரண்டு பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த மாநில அளவிலான போட்டி யில் சிநேந்ரா பாபு கோவைக்காக இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண் கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img