fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நூலகம் திறப்பு

கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நூலகம் திறப்பு

கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை கொண்டாடுதல் பொருட்டு பொன்விழா நினைவு நூலகம் ஒன்று ஒன்றிய அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்நினைவு நூலகத்தை ஒன்றியத்தின் தலைவர் மதுக்கரை மகாலிங்கம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் கிருஷ்ணன் திறந்து வைத்தார்கள்.

இவ்விழாவில் ஸ்ரீதர் துணைப்பதிவாளர்/முதல்வர் ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், அர்த்தநாரீஸ்வரன், துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), வெள்ளைச்சாமி, ராமகிருஷ்ணா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வாழ்த்துரை ஆற்றினார்கள்.

ஒன்றியத்தின் துணைத்தலைவர் ரெங்கராஜ் ஏற்புரை ஆற்றினார்.
மேலும் இவ்விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டுறவு சார்பதிவாளர்கள், பணியாளர்கள், ராமலிங்க கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

நிறைவாக நா.பாரதி கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் நன்றியுரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img