fbpx
Homeபிற செய்திகள்தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்த கங்கா கல்லூரியில் ‘மனித பிரமிடு’

தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்த கங்கா கல்லூரியில் ‘மனித பிரமிடு’

75-வது சுதந்திர தினத்தையொட்டி கங்கா கல்லூரியின் 75 மாணவர்கள் வடிவவைத்த ‘மனித பிரமிடு’ தேசிய ஒருமைப்பாட்டினை உணர்த்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.

கங்கா நிறுவன குழுமத்தின் ஒர் அங்கமான கங்கா உடல் நலக் கல்வி மையத்தின், சுதந்திர தின கொண்டாட்டம் கங்கா மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. கேபிஆர் நிறுவன குழுமத்தின் தாளாளர் கே.பி.ராமசாமி கொடி யேற்றிவைத்து பேசினார்.

கங்கா நிறுவன தாளாளர் டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன் தலைமை தாங்கினார்.
மருத்துவமனை இயக்குனர்கள் டாக்டர் ராஜசபாபதி, டாக்டர் ராஜசேகரன் முன்னிலைவகித்தனர்.

கங்கா செவிலியர் கல்லூரி முதல்வர் எஸ்தர் ஜான் வரவேற்றார்.
தேசப்பற்று ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் துவக்கமாக பாரம்பரிய நாட்டியக் கலை முன் செல்ல மாணவ, மாணவியரின் மனித சாகச வாகனம் தொடர்ந்தது.
ஆசாதி அம்ரித் ம«£த் உத்சவ் குறித்த நிகழ்வுகள் மாணவியரின் பேச்சாற்றலில்வெளிப் படுத்தப்பட்டது.

காமன் வெல்த் மற்றும் ஓலிம்பியாடு வாகை வீரர்களுக்கு பெருமை சேர்த்திடும் வகையில் ‘ஒளிரும் இந்தியா’ எனும் வீர வணக்க ஒளியேற்ற நிகழ்வு நடந்தது.
இயற்கை வளங்களின் அமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ‘கங்கா கானகம்’ எனும் காட்சிப்படம் சிறப்பு சேர்த்தது.

4 கல்லூரி மாணவர்கள், வண்ணத்து பூச்சியாய், ஆந்தை, குரங்கு வடிவில் உருமாறி, மெய் சிலிர்க்க வைத்தனர்.

மனித வாகனமாய் மாறிய மாணவர்கள், தேச பெருமை எனும் அணையா ஜோதியினை சிறப்பு விருந்தினர் ஒளிர விட, தேச முன்னேற்றத்தை பிரபஞ்சப் படுத்தினர்.

கங்கா கல்லூரியில் தயாரிக் கப்பட்ட ‘மூவர்ண இனிப்பு’ (KARACHI HALWA) வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img