தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 73வது குடியரசு தின விழா நடந்தது. பொது மேலாளர் வெ.சுந்தரேஸ்வரன் முன்னிலையில் வங்கியின் தலைவர் இரா.சுதாகர் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர் அ.நடராஜன், உதவி பொதுமேலாளர் என்.காந்திமதிநாதன், மேலாளர்கள் ரவீந்திரன், நேசம்மாள், செல்வராணி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



