fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு

தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு

தூத்துக்குடி துறைமுக கல்விக் கழகத்தின் நிர்வாக த்தின் கீழ் நடைபெற்று வரும் துறைமுக மேல்நிலை பள்ளியில் 1989-2001ஆம் ஆண்டு வரை மேல்நிலைக் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் 21 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி துறைமுக பள்ளியில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் மாணவ, மாணவிகள் தங்களது பிள்ளைகளுடன் குடும்பமாக கலந்து கொண்டு தங்களது பசுமை நிறைந்த நினைவுகளையும், மாணவ பருவ நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில், முன் னாள் மாணவர்கள் செல்வ சரவணன் இசக்கியம்மாள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள் முன்னாள் மாணவர் பேச்சிமுத்து வரவேற்புரை மற்றும் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமையாசிரியர் ஆன்டனி பவள ஹெக்டோ மற்றும் தற்போதைய தலை மையாசிரியை ஷர்மிளா தலைமை வகித்தார்.

முன்னாள் ஆசிரியர் காந்திமதிநாதன், சுப்பம் மாள், சார்லஸ் ரத்தின ராஜ், சரோஜா ஞானம், அருண்குமார், புனிதா, மேமா, ரெஜினா, விநாயகம், மஞ்சுளா, கிளாடிஸ், மணித்தாய், முருகம்மாள், பாலா, ஆத்தியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பழைய மாணவகள் மந்திர மூர்த்தி, செந்தில், பழனிதாய், சுபா கார்த்திகா, கனகராஜ், மாடசாமி, ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

பழைய மாணவர்களின் சார்பாக சிறப்பாக படித்த இந்நாள் மாணவர்களுக்கும் பரிசுகளும், பள்ளி மேம்பாட்டிற்கு சிறிய நன் கொடையும் வழங்கப் பட்டது.

படிக்க வேண்டும்

spot_img